Oct 16, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் மனைவியை அடித்த வியாபாரிக்கு பத்து ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் மனைவியை அடித்த வியாபாரிக்கு பத்து ஆண்டு சிறை

ஜோகூர்பாரு, டிச.9-


தனது முன்னாள் மனைவி சுயநினைவை இழந்து, முடத்தன்மையை எதிர்கொள்ளும் அளவிற்கு அவரை கடுமையாக தாக்கிய குற்றத்திற்காக வியாபாரி ஒருவருக்கு ஜோகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

41 வயது ரோஸ்மயினி அபாங் ராவ்ப் என்ற அந்த வியாபாரிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி பெற்றுள்ளதாக வழக்கை செவிமடுத்த நீதிபதி பாத்திமா ஸஹாரி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 17 ஆம் தேதி லார்கின், கம்போங் அமானில் உள்ள ஒரு அடுக்கு மாடி வீட்டில் அந்த வியாபாரி இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →