Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அரச விசாரணை ஆணையம் அமைப்பது, விவாதிக்கப்படவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரச விசாரணை ஆணையம் அமைப்பது, விவாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர், செப்டம்பர் 06-

செவித்திறன் இழந்த ஒரு மாற்றுத் திறனாயான e- hailing ஓட்டுநர் ஒருவர், ஜோகூர் இடைக்கால சுல்தாான், துங்கு மகோடா இஸ்மாயில் - லின் போலீஸ் மெய்காவலரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்ய அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை குறித்து அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அடுத்து நடைபெறும் அமைச்சவைக்கூட்டத்தில் விவாதிக்கப்படுமா? என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை என்று தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →