ஈப்போ, செப்டம்பர்.03-
மக்களுக்குத் தாம் ரொக்கப் பணம் வழங்குவது போல் போலியாக சித்திரிக்கப்பட்ட ஏஐ வீடியோவுக்கு எதிராக, பேராக் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் போலீசில் புகார் அளித்துள்ளார்.
டிக் டாக்கில் பலராலும் பகிரப்பட்டு வரும் அந்த போலி வீடியோவில் இருப்பது, தனது உருவம் தான் என்றாலும், அதில் உள்ள குரலும், வாயசைவும் ஏஐ தொழில்நுட்பத்தினால் மாற்றப்பட்டுள்ளதாக சரானி முகமட் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களைக் கொண்ட அந்த வீடியோவை உடனடியாக அகற்றும்படியும், அந்த வீடியோவை வெளியிட்ட நபர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும், மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தையும் சரானி முகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.








