Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்

டிச. 23-

ஜோகூரில் இரவு விடுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்யும் ஒரு கும்பலை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த கும்பல் வெளிநாட்டு பண உறைகளில் எக்ஸ்டஸி போதைப்பொருளை நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர். Taman Pelangi பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கும்பலின் செயல் வெளிச்சத்திற்கு வந்தது என் JOHOR BHARU SELATAN மாவட்டக் காவல் துறையின் தலைவர் Asisten Komisioner Raub Selamat வெளியிட்ட அறிக்கியில் குறிப்பிட்டார்.

இந்த சோதனையில், 33 , 40 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் methamphetamine, ketamin போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியது சிறுநீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பதும் தெரியவந்துள்ளது.

காவல் துறையினர் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 161 ரிங்கிட் மதிப்புள்ள ekstasi , 1,800 ரிங்கிட் மதிப்புள்ள Erimin 5 மாத்திரைகள், 760 ரிங்கிட் மதிப்புள்ள ketamin ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரொக்கப் பணம் 120 ரிங்கிட்டும் மைவி கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்த பறிமுதல் மதிப்பு 2 இலட்சத்து 35 ஆயிரத்து 841 ரிங்கிட் ஆகும்.

அடுக்குமாடி குடியிருப்பையும் கார்களையும் போதைப்பொருட்களை சேமித்து வைப்பதற்கும், பொட்டலம் செய்வதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். அக்டோபர் மாதம் முதல் இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்