Jun 29, 2026
Thisaigal NewsYouTube
யாரையும் சங்கடப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல: எஸ்பிஆர்எம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

யாரையும் சங்கடப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல: எஸ்பிஆர்எம் விளக்கம்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.28-

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஸைனுடினின் பிள்ளைகளைத் தேடி பொது அறிவிப்பு வெளியிட்டது யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, ஊழல் தடுப்பு ஆணையம், டாயிம் ஸைனுடினின் நான்கு பிள்ளைகளான அஸ்னிடா, வீரா டானி, அமீர் மற்றும் அமீன் ஆகியோரை விசாரணைக்கு உதவுவதற்காகத் தேடி வருவதாக நேற்று அறிவித்திருந்தது.

இது குறித்து இன்று மாலை விளக்கம் அளித்த அந்த ஆணையம், டாயிம் ஸைனுடினின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட இரண்டு அதிகாரப்பூர்வ நோட்டீஸ்களுக்கு அவர்கள் பதிலளிக்கத் தவறியதைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமான அடுத்தக் கட்ட நடவடிக்கையாகவே இந்த பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இது ஒரு தண்டனையோ அல்லது 'தேடப்படும் குற்றவாளி' பட்டியலோ அல்ல; மாறாக, விசாரணைக்கு சம்பந்தப்பட்டவர்களின் வருகையை உறுதிச் செய்வதற்கான ஒரு நடைமுறை மட்டுமே என்று எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.

போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் அவர்கள் ஒத்துழைக்கத் தவறியதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எஸ்பிஆர்எம் கூறுகிறது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு