Aug 7, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் 14 வயது பள்ளி மாணவிகள் இருவர் உயிரிழப்பு: போலீஸ் தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் 14 வயது பள்ளி மாணவிகள் இருவர் உயிரிழப்பு: போலீஸ் தீவிர விசாரணை

Share:

பேராக் மாநிலம், சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு அருகேயுள்ள புதர் ஒன்றில், 14 வயதுடைய பள்ளி மாணவிகள் இருவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சமூகத்தை சேர்ந்த அந்த இரு இளம் பெண்களின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள 15 மாடிக் கட்டிடம், ஈப்போ நகர சபையின் மேற்பார்வையின் கீழ் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு மேலாக ஆளில்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள அக்கட்டிடம் அருகே இந்த இரு இளம் பெண்களின் சடலம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி சைனல் ஆபிதீன் வெளியிட்ட அறிக்கையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த இரு மாணவிகளும் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் பள்ளியை விட்டு தாமாகவே வெளியேறியதாக நம்பப்படுவதாகவும், இதுவரை குற்றச்செயல் நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், உடற்கூறு பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் உறுதி செய்யப்படும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

ஈப்போவில் 14 வயது பள்ளி மாணவிகள் இருவர் உயிரிழப்பு: போலீஸ... | Thisaigal News