Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மாணவனை மோதிய காவல் துறை அதிகாரி : 12 புகார்கள் பெறப்பட்டன
தற்போதைய செய்திகள்

மாணவனை மோதிய காவல் துறை அதிகாரி : 12 புகார்கள் பெறப்பட்டன

Share:

ஈப்போ, தாமான் ஜத்தியில் 17 வயதுடைய மாணவனை காவல் துறை அதிகாரி மோதிய விவகாரத்தில் பொது மக்களை உட்படுத்திய 12 புகார்கள் பெறப்பட்டதாக பேரா மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவதால், அதற்கு உதவும் வகையில் ஆதாரங்களை பொது மக்கள் வசம் இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் எதிர்மறையான கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் காவல் துறை விசாரணைக்குத் தொந்தரவாய் அமைந்திடக்கூடும். நீதியை நிலை நாட்ட நேர்மையுடனும் உண்மையுடனும் விசாரணை நடத்தப்படும் என யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி உறுதியளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் சம்பவ நடந்த இடத்தில் சிசிடிவி கருதி இருந்தால், அதனைக் கொன்டு ஆதாரங்களைத் திரட்ட ஈப்போ மாநகர் மன்றமான எம்பிஐ யின் உதவியை காவல் துறை நாடவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ருமைசி பஹாரின் காவல் துறைக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.

எம்பிஐ அப்பகுதியில் சிசிடிவி கருவியைப் பொருத்தவில்லை என்றாலும், அவ்வட்டாரக் குடியிருப்புவாசிகளிடம் இருந்து பெற்றுத் தர முயலும் எனவும் மிக விரைவியில் விசாரணை முடிக்கப்பட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் காவல் துறை ஒப்படைக்கும் எனக் கூறியது.

Related News