கோலாலம்பூர், நவம்பர்.24-
டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மலேசியாவின் தேசிய அருங்காட்சியம் புத்துயிர் பெற்றுள்ளதால், அம்முயற்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தினமும் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடத் தொடங்கியுள்ளனர்.
பழைய கலைப் பொருட்களைப் பார்ப்பதற்காக மட்டுமே பார்வையாளர்கள் வரும் இடமாக இருந்த இந்த அருங்காட்சியகம், இப்போது இளைய தலைமுறையினரையும் ஈர்த்து வருவதாக அதன் இயக்குநர் ஸம்ருல் அம்ரி ஸகாரியா தெரிவித்துள்ளார்.
ஒருமுறைப் பார்வையிடுவதோடு நின்றுவிடாமல், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில், ‘தேசிய அருங்காட்சியகத்தில் ஓர் இரவு’ போன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் பலனளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாத நிலவரப்படி, சுமார் 5 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளதாகவும், இவ்வாண்டு இறுதிக்குள் அது 6 லட்சமாக உயர்ந்து விடும் என்றும் ஸம்ருல் அம்ரி ஸஜாரியா தெரிவித்துள்ளார்.








