ஜோகூர் பாரு, ஜூலை.24-
செல்லத்தக்கப் பயண ஆவணம் மற்றும் வேலை பெர்மிட்டின்றி நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படும் 223 சட்டவிரோதக் குடியேறிகளை ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தஞ்சோங் லங்சாட், பாசீர் கூடாங் ஆகிய பகுதிகளில் உள்ள மிகப் பெரிய பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலைகளை இலக்காகக் கொண்டு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது மொத்தம் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.
21 க்கும் 63 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த சட்டவிரோதக் குடியேறிகள் ஓப்ஸ் மாஹிர் சோதனையின் மூலம் கைது செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.








