May 24, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் – கெராக்கான் சர்ச்சை தீர்க்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பாஸ் – கெராக்கான் சர்ச்சை தீர்க்கப்பட்டது

Share:

ஆகஸ்ட் 03-

சீனப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மதுபான நிறுவனம் நிதி திரட்டி வருவதாக எழுந்த சர்ச்சையில் பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சிகளான பாஸ் கட்சிக்கும், கெராக்கானுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் பிணக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கெராக்கானின் தலைவர் Dominic Lau, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Mat மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட சந்திப்பின் வாயிலாக இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனை பெரிக்காத்தான் நேஷனலின் பொதுச் செயலாளர் Datuk Seri Hamzah Zainudin அறிவித்துள்ளார்.

ஒரு குடும்பத்தில் உறுப்பினர்கள் மத்தியில் இயல்பாக நடக்கக்கூடிய வாக்குவாதம், சர்ச்சை மற்றும் பிணக்குகளைப் போலவே பெரிக்காத்தான் நேஷனலில் உள்ள இரண்டு உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் Hamzah Zainudin இதனை தெரிவித்தார்.

Related News

பாஸ் – கெராக்கான் சர்ச்சை தீர்க்கப்பட்டது | Thisaigal News