கிள்ளான் ஜலான் பெராய் பகுதியில் நேற்று அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், 100 பெட்டிகள் சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இந்திய பிரஜை உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று பிற்பகல் 1 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 40 வயதுகளில் உள்ள இரு சந்தேகநபர்களும் வாகனம் ஒன்றிலிருந்து மற்றொரு வாகனத்திற்கு பெட்டிகளை மாற்றிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொதுச் செயல்பாட்டுப் படைப் பிரிவு பட்டாலியன் 4-இன் தளபதி அமன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இரு வாகனங்களையும் சோதனையிட்டபோது, சுங்க வரி செலுத்தப்படாத ரோயல் டச்சு ரகத்தைச் சேர்ந்த 100 பெட்டிகள் சட்டவிரோத மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 4 லட்சத்து 9 ஆயிரத்து 818 என மதிப்பிடப்பட்டுள்ளது.








