Jul 15, 2026
Thisaigal NewsYouTube
போலீசின் பெயர், சின்னம், புகைப்படங்களை வணிக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

போலீசின் பெயர், சின்னம், புகைப்படங்களை வணிக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

Share:

அரச மலேசிய போலீஸ் படையின் பெயர், அதிகாரப்பூர்வ சின்னம் போலீஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அடையாளங்களை, முன் அனுமதி இன்றி, பயன்படுத்தக் கூடாது என்ற பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விளம்பர நிறுவனங்களும், அமைப்புகளும், சின்னங்களை வணிக நோக்கத்திற்காக சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசிய போலீஸ் படைத்தலைவர் தான் ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் வெளியிட்டுள்ள தகவலில், போலீஸின் அதிகாரப்பூர்வ அடையாளம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய நிறுவனச் சொத்து என்றும், அதை நிதி ஆதாயத்திற்காகவோ, தவறாக வழிநடத்தும் வகையிலோ பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் கொண்டால், அதனை ஒரு அங்கீகாரமாகக் கருதி, வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் காலித் இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News