Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கின்ராரா காடு அருகேயுள்ள நிலம் சந்தை மதிப்புக்குக் குறைவாக விற்கப்பட்டதா? - சிலாங்கூர் மந்திரி பெசார் மறுப்பு
தற்போதைய செய்திகள்

கின்ராரா காடு அருகேயுள்ள நிலம் சந்தை மதிப்புக்குக் குறைவாக விற்கப்பட்டதா? - சிலாங்கூர் மந்திரி பெசார் மறுப்பு

Share:

கின்ராராவில் உள்ள ஆயர் ஈத்தாம் காடு அருகிலுள்ள நிலம் சந்தை மதிப்புக்கு குறைவாக விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு அதற்கென ஒரு சொத்து ஆலோசகர் நியமிக்கப்பட்டு, அந்த நிலத்தின் மதிப்பு சதுர அடி ஒன்றுக்கு 13.02 ரிங்கிட் என்றும், மொத்தமாக 95.3 மில்லியன் ரிங்கிட் என்றும் மதிப்பிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொது ஏல முறையில் மூன்று நிறுவனங்கள் பங்கேற்றதாகவும், இறுதியில் அந்த நிலம் 101 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டதாகவும் அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலையானது அதன் மதிப்பீட்டைவிட 5.9 விழுக்காடு அதிகம் என்று அமிருடின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை