Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் சித்து விளையாட்டில்  அரண்மனைக்கு தொடர்பு இல்லை
தற்போதைய செய்திகள்

அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனைக்கு தொடர்பு இல்லை

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.9
தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனைக்கு தொடர்பு இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் அரண்மனை சம்பந்தப்படவில்லை என்று இஸ்தானா நெகாராவில் இன்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷாஹ் -வுடன் நடந்த சந்திப்பில் இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

தவிர பிரதமர் என்ற முறையில் தமது தலைமையிலான அரசாங்கம், நாட்டு நிர்வாகப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்து வேண்டும் என்று மாமன்னர் தம்மை கேட்டுக்கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.

தமது தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு துபாய் நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது தொடர்பில் பிரதமர் விளக்கம் அளித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனைக்கு தொடர்பு இல்லை | Thisaigal News