கோலாலம்பூர், செப்டம்பர்.09-
தலைநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சுமார் 2100 வாகனமோட்டிகளுக்கு Advocacy notice-கள் வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஓப்ஸ் PUU என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் சுமார் 2,784 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 4 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், நேற்று செப்டம்பர் 8-ம் தேதி, 2,077 advocacy notice-களும், 24 டிபிகேஎல் நோட்டீஸ்களும், 26 ஜேபிஜே நோட்டீஸ்களும் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








