Jun 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

Share:

கோலாலம்பூரில் இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழை மற்றும் சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துப் பாதிப்பும், வாகனச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

பிற்பகல் 2.50 மணி அளவில் அவசர அழைப்புகள் வந்ததை அடுத்து, கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உடனடியாக மூன்று இடங்களுக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மேக்ஸ் நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீ மலேசியா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் பெர்சோனா கார் மீது மரம் விழுந்தது.

சுங்கை பீசியில் உள்ள மலேசிய சமூகவியல் கட்டட வளாகத்தில் வாகன நிறுத்தக் கூரையின் மேல் பெரிய மரம் விழுந்ததில் அங்கிருந்த 4 கார்கள் சேதமடைந்தன.

இந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினர் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்ற ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்துச் சாலைகளும் மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டன.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்