May 25, 2026
Thisaigal NewsYouTube
 'கேங் ஆர்டி' போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

'கேங் ஆர்டி' போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்கிறது

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020 ஆண்டு முதல் போதைப்பொருள் தயாரிப்பு, விநியோகம் மற்றும் பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்த ‘கேங் ஆர்டி’ என்ற ஆபத்தான குண்டர் கும்பலைச் சேர்ந்த 12 நபர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் அந்த கும்பலை சேர்ந்த எஞ்சிய நபர்களை பிடிப்பதற்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

பிடிபட்ட 12 பேரும் 2012 ஆம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்பு சட்டமமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்போருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 12 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இக்கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவரிடமிருந்து சுமார் எட்டரை கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 12 நபர்களுக்கும் ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் வன்முறைக் குற்றங்கள் சார்ந்த பல குற்றப் பின்னணிகள் இருப்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டத்தோ ஹுசைன் குறிப்பிட்டார்.

அவர்களில் 11 பேர், 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கடந்த மே 8 தேதி அம்பாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். ‘கேங் ஆர்டி’ கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களை போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று டத்தோ ஹுசைன் கூறினார்.

Related News