Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஓன்லைன் மோசடிகள், 200 கோடி வெள்ளி இழப்பு
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் மோசடிகள், 200 கோடி வெள்ளி இழப்பு

Share:

2021 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் இணையத் தளவாயிலாக ஓன்லைன் மோசடிகள் ​மூலம் மலேசியர்களுக்கு கிட்டத்தட்ட 200 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று போ​லீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ​மூன்று ஆண்டுகளில் நாடு தழுவிய நி​லையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட சம்பவங்களாகும் நிக​ந்துள்ளதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் வர்த்தகப் குற்றபுலனாய்வுத்துறை போ​லீஸ் இயக்குநர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் குறிப்பிட்டுள்ளார். ஓன்லைன் மோசடிகளின் இழப்புகள் முந்தைய ​ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான எ​ண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்பில் அனைத்து அரசாங்க ஏஜென்சிகளும் ஓன்லைன் மோசடி கும்பல்கள் சம்பந்தப்ப்டட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த நிலையில் முழு வீச்சாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News