ஜோகூர் பாரு, செப்டம்பர்.09-
தாம் தங்கியிருந்த ஹோட்டலின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.32 மணியளவில் ஜோகூர் பாரு, பெர்ஜாயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நிகழ்ந்தது.
அந்தப் பெண் நான்காவது மாடியிலிருந்து ஒன்றாவது மாடியில் உள்ள கூரை மீது விழுந்து கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக லார்கின் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் நாகிஷ் நெக்மாட் தெரிவித்தார்.
25 வயதுடைய அந்தப் பெண்ணின் உடலை மீட்பதற்கு ஏஎல்பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








