சிரம்பான், ஆகஸ்ட்.18-
சட்டவிரோதமான முறையில் ஈட்டபட்ட 20 லட்சம் ரிங்கிட் தொகையைப் பண மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்டுமானத் தள ஆய்வாளர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
62 வயது லாவ் துவான் ஹாய் என்ற நபர், நீதிபதி முகமட் காமில் நிஸாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 20 லட்சம் ரிங்கிட்டை ஒரு வழக்கறிஞர் நிறுவனத்திடமிருந்து பெற்று, 54 வயது நபரை நம்ப வைத்து, தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டதாக அந்த நபர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.








