Sep 27, 2026
Thisaigal NewsYouTube
உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு 9,100 ரிங்கிட்  அபராதம்
தற்போதைய செய்திகள்

உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு 9,100 ரிங்கிட் அபராதம்

Share:

கோல லங்காட், தெலுக் மெங்குவாங் பகுதியில் உள்ள ஒரு கடல் உணவு உணவகத்தில், சட்டை அணியாமல் ரகளையில் ஈடுபட்ட 32 வயது லாரி ஓட்டுநர் பி. மகேந்திரனுக்கு, தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 9,100 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

மகேந்திரன், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 22 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் மஸ்லிண்டா செலாமாட் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி, உணவுக் கட்டணம் தொடர்பான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மகேந்திரன், உணவகத்தின் மேசை, நாற்காலிகளை அடித்து உடைத்ததோடு, உரிமையாளரைத் தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் ரோந்து வாகனத்தை பிரம்பால் தாக்கிச் சேதப்படுத்தியதோடு, அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் மிரட்டியதற்காகவும் அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நீதிமன்றத்தில் தனது தவறை ஒப்புக்கொண்ட மகேந்திரன், இதற்கு முன் குற்றப்பின்னணி இல்லாதவர் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மகேந்திரன், சட்டை அணியாமல், போலீஸ்காரரை துருத்திக்கொண்டு ஓடும் காட்சி, அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Related News

உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு 9,100 ரிங்க... | Thisaigal News