Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சையிட் சாடிக்கிற்கு எதிரான நம்பிக்கை மோசடி வழக்கில் நவம்பர் 9 இல் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

சையிட் சாடிக்கிற்கு எதிரான நம்பிக்கை மோசடி வழக்கில் நவம்பர் 9 இல் தீர்ப்பு

Share:

மூடா கட்சியின் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையிட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் க்கு எதிரான நம்பிக்கை மோசடி வழக்கில் நவம்பர் 9 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

நான்கு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர், விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான சையிட் சாதிக் 4 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்படுவாரா? அல்லது குற்றவாளி என்று தீர்ப்பளித்து சிறைத் தண்டனை விதிக்கப்படுவாரா ? என்பது குறித்து அன்றைய தினம் உயர்நீதிமன்றம் முடிவு செய்யவிருக்கிறது.

உயர் நீதிமன்ற நீதிபதி அசார் அப்துல் ஹமீத், காலை 9 மணிக்கு தமது தீர்ப்பை வழங்கவிருக்கிறார். சையிட் சாதிக் கிற்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக கூறி, அவர் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி உயர் நீதிமன்றம் அறிவித்து இருந்தது.

சையிட் சாதிக் கிற்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரங்கள் உள்ளன என்பதை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி கண்டுள்ளதாக நீதிபதி அசார் அப்துல் ஹமீத் தெரிவித்து இருந்தார்.

பெர்சத்து கட்சி இளைஞர் பிரிவின் முன்னாள் உதவி பொருளாளர் ரஃபிக் ஹகிம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்ட பத்து லட்சம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்வதில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக 30 வயதான சையிட் சாடிக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி கே.எல். செண்ரல், மெனாரா சி.ஐ. எம். பி கட்டடத்தின் சி.ஐ.எம்.பி வங்கியில் சையிட் சாட்டிக் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News