ஜார்ஜ்டவுன், அக்டோபர்.04-
பினாங்கு, சுங்கை டூவா, ஜாலான் பெர்மாத்தாங் தீகாவில் இன்று காலையில் நிகழ்ந்த விபத்தில் கார் தீப்பற்றிக் கொண்ட சம்பவத்தில் கருகி மாண்ட இரு ஆடவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த இரு ஆடவர்களின் கருகிய உடல்களும், கெப்பாளா பாத்தாஸ் மருத்துவமனையின் சவக்கிடங்கில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பில் முழு விசாரணை அறிக்கைக்காகத் தாம் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக நம்பப்படும் கார், சாலையை விட்டு விலகி, தடம் புரண்டதில் ஒருவர், காருக்குள்ளேயும், மற்றொருவர் காருக்கு வெளியேயும் இறந்து கிடந்தனர்.








