3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 24 வயது பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் ஜோஹோர் , தஞோங் லாபோ - ஜொஹோர் பஹாரு - மலாக்கா சாலையின் 119வது கிலோ மீட்டரில், பத்து பகாட் அருகில் நிகழ்ந்தது.
காலை 8.30 மணி அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அஸ்னிசா அடிக் என்பவரே உயிரிழந்ததாக போலிசார் அடையாளம் கூறினர். அப்பெண் செலுத்திய மோட்டார் சைக்கிள், சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிள் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மோதி அப்பெண் தூக்கி எரியப்பட்டதாக பத்து பகாட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சஹ்ருல் அனுவார் தெரிவித்தார்.
சாலையின் நடுவே விழுந்த அப்பெண்ணை எதிரே வந்த லோரி மோதியதில் அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக ஷஹ்ருல் அனுவார் குறிப்பிட்டார்.








