May 25, 2026
Thisaigal NewsYouTube
லைசென்ஸின்றி வாணவேடிக்கை: லோரி ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

லைசென்ஸின்றி வாணவேடிக்கை: லோரி ஓட்டுநர் கைது

Share:

தெலுக் இந்தான், நவம்பர் 05-

தெலுக் இந்தான், ஜாலான் ஸ்பிடியில் உள்ள தெலுக் இந்தான் நகராண்மைக்கழகத்திற்கு சொந்தமான அரேனா ஸ்குவர் மண்டபத்தில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பில் 24 வயது லோரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்காக அந்த மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வில் தீ பரவியது.

விருந்து நிகழ்வில் உச்சக்கட்டமாக மண்டபத்திற்கு வெளியே வாணவேடிக்கை நடத்தப்பட்டத்தில் கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறிகள், அந்த மண்டபத்தின் கூரையில் பட்டு தீ கொழுத்து விட்டு எரியத் தொடங்கியது.

லைசென்ஸின்றி இந்த வாணவேடிக்கையை நடத்தியதாக நம்பப்படும் அந்த லோரி ஓட்டுநர்ர், நேற்று திங்கட்கிழமை, பிற்பகல் 3 மணியளவில் தெலுக் இந்தானில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

இந்த விருந்து நிகழ்வில் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை.
மண்டபத்தின் கூரையில் பரவிய தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடினர்.

சம்பந்தப்பட்ட நபர், விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவலில் வைப்பதற்கு இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அனுமதி பெறப்பட்டதாக ஏசிபி அகமட் அட்னான் குறிப்பிட்டார்.

Related News