Oct 17, 2026
Thisaigal NewsYouTube

வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வழக்கு விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

ஹுலு சிலாங்கூர், அக்டோபர் 07-

தஞ்சோங் மாலிம், UPSI கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி நூர் ஃபரா கர்தினி அப்துல்லா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர் ஒருவர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு விசாரணையை கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சிலிம் ரீவர் போலீஸ் நிலையத்தைச்சேர்ந்தவரான 26 வயது அலிஃப் மோஞ்சனி என்ற அந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட இந்த கொலை வழக்கில் சவப்பரிசோதனை அறிக்கை மற்றும் இரசாயன அறிக்கை போன்ற முக்கிய ஆவணங்களுக்காக தாங்கள் இன்னும் காத்திருப்பதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஐரீன் நபிலா அமானி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை வரும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

தனது காதலியான 25 வயது நூர் ஃபரா கர்தினி-யை கடந்த ஜுலை 10 அம் தேதி எஸ்கேசி கெலேடாங், முகிம் ஹுலு பெர்னாம், உலு சிலாங்வர் என்ற முகவரியில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் கொலை செய்ததாக அந்த போலீஸ்காரர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →