Oct 9, 2026
Thisaigal NewsYouTube

டாயிமின் சொத்து முடக்கத்திற்குத் தற்காலிக தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டாயிமின் சொத்து முடக்கத்திற்குத் தற்காலிக தடை

கோலாலம்பூர், ஜூன்.23-

முன்னாள் நிதி அமைச்சரும், அரசியல் பிரமுகருமான காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடினுக்குச் சொந்தமான லண்டனில் உள்ள 75 கோடியே 82 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களை முடக்குவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்ற ஒருதலைப்பட்சமான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.

துன் டாயிமின் துணைவியார் நயிமா காலிட் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அந்த ஒரு தலைப்பட்சமான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நீதிபதி அஸ்ஹார் ஹாமிட் தெரிவித்தார்.

அதே வேளையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பெற்ற ஒரு தலைப்பட்சமான தீர்ப்பு குறித்து முழு விசாரணை நடைபெறுவதற்கு வரும் ஜுலை 9 ஆம் தேதி விசாரணை நாளாக உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →