Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இணையவழி ஷாப்பிங்கின் வருகை காரணமாகவும் இந்த மையம் மந்தமாகி வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இணையவழி ஷாப்பிங்கின் வருகை காரணமாகவும் இந்த மையம் மந்தமாகி வருகிறது

நவ. 17-

நெகரி செம்பிலானின் ஒரு முக்கிய ஷாப்பிங் மையமாக திகழ்ந்த Pusat Perniagaan Nilai 3 குறிப்பாக திருமண பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிமணிகள் ஆகியவற்றிற்கு பிரபலமாக இருந்தது. ஆனால், தற்போது பொருளாதார சவால்களாலும் இணையவழி ஷாப்பிங்கின் வருகை காரணமாகவும் இந்த மையம் மந்தமாகி வருகிறது.

பல ஆண்டுகளாக இயங்கி வந்த Nilai 3 வணிக மையத்தில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இதனால், பல கடைகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றன. வியாபாரிகள், முக்கியமாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை காலங்களிலும் மட்டுமே வருகை புரியும் வாடிக்கையாளர்களை நம்பியிருக்கின்றனர்.

இந்த வணிக மையத்தை மீண்டும் முன்னேற்றும் பொருட்டு, நெகரி செம்பிலான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் J Arul Kumar தெரிவித்தார். சாலைகள், விளக்குகள் பிற அடிப்படை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் இந்த பகுதியை மீண்டும் பழைய பரபரப்பு நிலைக்கு முன்னேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது என நீலாய்சட்டமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார் .

மேலும், Nilai 3 ஐ ஒரு சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருள் குமார் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →