Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கூலிம், கோலாமூடா அதிரடிச் சோதனை: 14 அந்நிய நாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

கூலிம், கோலாமூடா அதிரடிச் சோதனை: 14 அந்நிய நாட்டினர் கைது

Share:

கெடா மாநில குடிநுழைவுத் துறை, கூலிம் மற்றும் கோலாமூடா மாவட்டங்களில் நடத்திய அதிரடிச் சோதனையில் 14 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் "ஓப்ஸ் மாஹிர்" மற்றும் "ஓப்ஸ் சாப்பு" ஆகிய நடவடிக்கைகளின் கீழ் மொத்தம் 251 பேரிடம் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பாகிஸ்தான், வங்காளதேசம், கென்யா, கானா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 13 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 14 பேர் பிடிபட்டதாக மாநில குடிநுழைவுத் துறைத் தலைவர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், அவர்கள் மேல் விசாரணைக்காக குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சோதனையின் போது நான்கு சாட்சி அழைப்பானைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார்.

Related News