Jun 6, 2026
Thisaigal NewsYouTube
டைகர் எம்பவர் - மலர் டெய்லி நிறுவனத்தின் AI பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது
தற்போதைய செய்திகள்

டைகர் எம்பவர் - மலர் டெய்லி நிறுவனத்தின் AI பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது

Share:

ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் டைகர் எம்பவர் மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி நடத்தப்பட்ட ஒரு இலவச பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த இலவச பயிற்சியானது, 5 நாட்கள், கோலாலம்பூரில் உள்ள மேவெம் அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறு வர்த்தகத் தொழில்முனைவோருக்கான இப்பயிற்சியில் தேர்வு செய்யப்பட்ட 10 பேர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த பயிற்சியில் பங்கேற்றோரின் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

தற்போது தாங்கள் செய்து வரும் தொழில் மற்றும் இப்பயிற்சியில் கலந்து கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து, அக்கட்டுரைகளில் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், இரண்டு நாட்கள் நேர்முகமாகவும் மற்றும் மூன்று நாள் இணையம் மூலமும் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் கலந்து கொண்டதால் தங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் நன்மைகள் குறித்தும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

ஒரு தனியார் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியை அனுஷா வெற்றிகரமாக வழி நடத்தினார்.

அடுத்த கட்டமாக இப்பயிற்சியில் பங்கு பெற்ற 10 பேரில் 3 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவர்.

இந்த மூவருக்கு பாட்காஸ்ட்-இல் பேட்டியளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு