Oct 18, 2026
Thisaigal NewsYouTube

காதலனால் கத்தியால் குத்தப்பட்ட பெண் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காதலனால் கத்தியால் குத்தப்பட்ட பெண் படுகாயம்

ஜெம்போல்,செப்டம்பர் 27-

காதலனால் கத்தியால் குத்தப்பட்ட இந்தோனேசியப் பெண் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நெகிரி செம்பிலான், ஜெம்போல், தமான் ஏசிபிஇ, பஹாவ், ஜெம்போல் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

வீட்டில் அந்த காதல் ஜோடிக்கு மத்தியில் ஏற்பட்ட வாய் தகராறு, பின்னர் கத்தி குத்தில் முடிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவிற்கே திரும்பப் போவதாக 30 வயது பெண் தெரிவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவரின் 38 வயது மியன்மார் காதலன், வாய்த் தகராற்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் பொறுமை இழந்தவராக காணப்பட்ட அந்த நபர், ஆவேசத்துடன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட Rohingya இனத்தைச் சேர்ந்த அந்த மியன்மார் பிரஜை, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற வேளையில் அந்த இந்தோனேசியப் பெண், சிகிச்சைக்காக கோலா பிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்