கோலாலம்பூர், செப்டம்பர்.22-
கோலாலம்பூர் மாநகரில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் பெய்த கனத்த மழையில் சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் டாமன்சாராவிலிருந்து கே.எல். சென்ரல் மற்றும் பங்சாருக்குச் செல்லும் சாலையில் மரங்கள் சாய்ந்துள்ளது தொடர்பில் சமூக வலைவாசிகள் தாங்கள் பதிவு செய்த படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
சாலைகளில் மரங்களும், கிளைகளும் விழுந்ததால் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து நெரிசல் நிலைக்குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.








