மலேசியாவிற்கும் எகிப்துக்கும் இடையில் இருந்து வரும் நல்லுறவின் காரணமாக எகிப்து வாயிலாக பாலஸ்தீன மக்களுக்கு பொருள் உதவிகள் வழங்க முடிகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் மனிதாபிமான பொருள் உதவிகள், பாலஸ்தீன மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கு எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல் சிசி அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றி வருவதே இதற்கு சான்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எகிப்து அதிபரை தாம் சந்தித்தபோதுகூட, ஓர் உணர்ச்சிகரமான நல்லுறவையே காண முடிந்தது என்றும், மலேசியாவின் மனிதாபிமான உதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி தாம் கேட்டுக்கொண்டதாகவும் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








