Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஓ தொங் கியோங் மேல் முறையீடு செய்துள்ளார்
தற்போதைய செய்திகள்

ஓ தொங் கியோங் மேல் முறையீடு செய்துள்ளார்

Share:

கோலாலம்பூர், மே.25-

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்குக்கு ஐந்தரை இலட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட பினாங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கெராக்கான் கட்சியின் துணைத் தலைவர் ஓ தொங் கியோங், மேல் முறையீடு செய்துள்ளார்.

ஓர் இசை நிகழ்ச்சிக்கு வரி விலக்கு பெற லிம் உதவியதாக ஓ தொங் கியோங் பொய்யானக் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால், உயர் நீதிமன்றம் கடந்த மே 7ஆம் தேதியன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது. மேல் முறையீடு மே 21 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதாகவும், மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு வரும் வரை, தீர்ப்பை நிறுத்தி வைப்பதற்கான விண்ணப்பம் மே 22 அன்று தாக்கல் செய்யப்பட்டதாகவும் ஓ தொங் கியோங்கின் வழக்கறிஞர் சாய் கோ திங் தெரிவித்தார்.

Related News