ஹரிராயா பெருநாள் நாட்களில் சிங்கப்பூர் - மலேசியா குடிநுழைவு முகப்பில் குடிநுழைவு அதிகாரிகள் இல்லை என்றும் நிறைய முகப்புகள் மூடி வைக்கப்பட்டது தொடர்பாக, தமக்கு புகார்கள் வந்துள்ளதாக ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபீஸ் கஸீ தெரிவித்தார்.
ஹரிராயா பெருநாளுக்கு முன்பு தான் குடிநுழைவு அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு அதிகாரிகள் மிக நல்ல முறையில் வேலை செய்ததாகவும் அனைத்து முகப்புகளிலும் அதிகாரிகள் உட்கார்ந்திருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
பெருநாள் காலங்களின் போது அதிகமானோர் சிங்கப்பூருக்கு செல்வதால், ஜொகூர் குடிநுழைவு இலாகா அனைத்து செயல்முறைகளும் சரிவென நடப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என மந்திரி புசார் கேட்டுக் கொண்டுள்ளார்.








