காஜாங், அக்டோபர்.03-
நேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள 16 வயது ஓர் இந்திய இளம் பெண் எஸ். சாமினியைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைப் போலீசார் நாடியுள்ளனர்.
செமினி, பண்டார் ரிஞ்சிங், செக்ஷன் 2 ஐ சேர்ந்த சாமினி, நேற்று மாலை 4 மணி முதல் காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.
140 சென்டிமீட்டர் உயரம், மெல்லிய உடல்வாகுவைக் கொண்டிருந்த அந்த இளம் பெண் ஆகக் கடைசியாக வெள்ளை நிற டி-சட்டையை அணிந்திருந்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமினியை நேரில் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை ஏசிபி நாஸ்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார்.








