Oct 20, 2026
Thisaigal NewsYouTube

மே 31 வரை இணையத்திலிருந்து 94 அரிசி விற்பனை விளம்பரங்கள் நீக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மே 31 வரை இணையத்திலிருந்து 94 அரிசி விற்பனை விளம்பரங்கள் நீக்கம்

புத்ராஜெயா, ஜூலை 03-

கடந்தாண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை அரிசி விற்பனை தொடர்பான 94 விளம்பரங்கள் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய தரப்பினர் நெல் - அரிசி - கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள சில்லறை வணிகர் LICENSE-சை கொண்டிருக்கவில்லை என வேளாண் உணவு உத்ரவாத அமைச்சு தெரிவித்தது.

அத்துடன் விற்பனை செய்யப்பட்ட அரிசி உறுதிப்படுத்தப்படாத தரப்பிடம் இருந்து பெறப்பட்டது அமைச்சு மேற்கொண்ட சோதனை வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.

மின் வர்த்தக தளம் மூலம் வாடிக்கையாளர்களிடம் விற்கப்பட்ட அந்த அரிசி யாவும் முறையான அனுமதியின்றி நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

சட்டத்தை மீறும் அத்தகைய செயலுக்கு எதிராக 25 ஆயிரம் ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என, அமைச்சு எச்சரித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து மூன்று அமைச்சுகள் இணைந்து முடிவெடுக்கும் – ஃபாட்லீனா

புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து மூன்று அமைச்சுகள் இணைந்து முடிவெடுக்கும் – ஃபாட்லீனா

அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடினால் நடவடிக்கை! சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை

அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடினால் நடவடிக்கை! சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை

வகுப்பறையில் மூச்சுத் திணறல்; 7 வயது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழப்பு

வகுப்பறையில் மூச்சுத் திணறல்; 7 வயது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழப்பு