கெடா மாநிலத்திலே முதன் முறையாக மாணவர்கள் புறப்பாட நடவடிக்கை நேரத்தில் பயிற்சி எடுப்பத்தற்காக லூபோக் புந்தார் இடைநிலைப்பள்ளி எட்டு விதமான ரெந்தாஸ் ஹாலாஙான் எனும் குறுக்குத் தடை தளத்தை உருவாக்கியுள்ளனர்வுள்ளனர்
பண்டார் பாரு வட்டாரத்தில் அமைந்துள்ள லூபோக் புந்தார் இடைநிலைப்பள்ளியில் 465 மாணவர்கள் பயின்று வருகின்றனர் . அம்மாணவர்களின் புறப்பாட நடவடிக்கையில் ஒரு பகுதியாக விளங்கும் சீருடை இயக்கங்களிலுள்ள மாணவர்களின் அணிவகுப்பில் அமலாக்க பயிற்சிகள் மேற்கொள்வத்தற்காகவே இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது .
Lubok Buntar இடைநிலைப்பள்ளியின் குறுக்குத் தடை தளம் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக கூலிம் பண்டார் பாரு மாவட்டத்தின் கல்வித்துறை இலாகாவின் தலைமை அதிகாரி அப்துல் ரஷிட் பின் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார் .
இத்திட்டதைப் பற்றி அப்துல் ரஷிட் கூறுகையில் பொதுவாகவே குறுக்குத் தடை தளம் பள்ளிகள் அளவில் காண்பது அரிது . அப்படி இருந்தாலும் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்காக அடிப்படையான தளம் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும் . ஆனால் லூபோக் புந்தார் இடைநிலைப்பள்ளியில் எட்டு விதமான தளங்களை உருவாக்கிருப்பத்தற்கு மிகவும் பாராட்டக் கூடியவை ஆகும் என்றார்.
இருந்தப்போதிலும் மாணவர்கள் குறுக்குத் தடை தளத்தில் பயிற்சியில் இறங்குவதற்கு முன்பு ஆசிரியர்கள் கட்டாயம் அவர்களின் பாதுக்காப்புக்காக விதிமுறைகளை விளக்க வேண்டும் என்றார்.
மேலும் , இந்த குறுக்குத் தடை தளம் பொதுவாகவே பெரிய அளவிலுள்ள புறப்பாட நடவடிக்கை மையங்களிலும் அமலாக்க மையங்களில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் கிராமப் புற பள்ளியான லூபோக் புந்தார் இடைநிலைப்பள்ளியின் முயற்சியில் கெடா மாநில சரித்திரத்தில் பள்ளி வளாகத்தில் குறுக்குத் தடை தளம் தோற்றுவிக்கப்பட்டு இருப்பது பெருமைப்பட வேண்டிய செயலாகும் என்று அப்துல் ரஷிட் பாராட்டினார் .
இதனிடையே அப்பள்ளியின் தலைமையாசிரியரான சித்தி சல்மியா பிந்தி அப்துல்லா கருத்துப்படி இத்திட்டம் கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது . மூன்று மாதக் காலத்தில் ஆசிரியர் அலிஃப் தலைமையில் பலரின் உதவியில் 11 ஆயிரம் வெள்ளி செலவில் குறுக்குத் தடை தளம் அமைக்கபட்டதாக குறிப்பிட்டார்.








