Oct 1, 2026
Thisaigal NewsYouTube

நாளை தீர்ப்பு! சிறையா? வீடா? நஜிப் ரசாக்கின் தலைவிதியை நிர்ணயிக்கும் அந்தக் கூடுதல் ஆணை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாளை தீர்ப்பு! சிறையா? வீடா? நஜிப் ரசாக்கின் தலைவிதியை நிர்ணயிக்கும் அந்தக் கூடுதல் ஆணை!

கோலாலம்பூர், டிசம்பர்.21-

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத் தண்டனையைச் சொகுசான வீட்டுக் காவலில் கழிக்க முடியுமா என்பது குறித்த இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் நாளை திங்கட்கிழமை வழங்கவுள்ளதால் மலேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது! முன்னாள் மாமன்னர் வழங்கியதாகக் கூறப்படும் அந்தக் 'கூடுதல் அரசாணை' உண்மையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி, தன்னை உடனடியாகக் காஜாங் சிறையிலிருந்து வீட்டுக்கு மாற்ற வேண்டும் என்பதே நஜிப்பின் அதிரடி கோரிக்கையாகும்.

பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நஜிப்பின் இந்த மனுவை முழுமையாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், நீதிபதி டத்தோ எலிஸ் லோக் நாளை அறிவிக்கப் போகும் முடிவு மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஒரு வேளை தீர்ப்பு அவருக்குச் சாதகமாக அமைந்தால், 1MDB ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வரும் நஜிப், 2028-ஆம் ஆண்டு வரை தனது சொந்த இல்லத்திலேயே சிறைவாசத்தை அனுபவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழக்கூடும்!

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →