கோலாலம்பூர், நவம்பர்.25-
கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் திரையரங்கில் திரைப்படம் ஒன்றைத் தனது கைப்பேசியில் பதிவு செய்த குற்றத்திற்காக ரஷ்யப் பிரஜை ஒருவருக்கு பத்தாயிரம் ரிங்கிட் அபாரதம் விதிக்கப்பட்டது.
இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட தனியார் பல்லைக்கழக மாணவரான 21 வயது Golod Artem என்ற அந்த ரஷ்யப் பிரஜை தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி Izralizam Sanusi இந்த அபராதத் தொகையை விதித்தார்.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பேரங்காடி திரையரங்கில் திரையிடப்பட்ட “Now Yuo See Me 3* என்ற படத்தைக் கைப்பேசியில் அந்த மாணவன் பதிவு செய்து கொண்டு இருந்த போது, திரையரங்கின் நிர்வாகியால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.








