Mar 23, 2026
Thisaigal NewsYouTube
2022 ஆம் ஆண்டிலிருந்து காவல் துறையில் ஏற்பட்ட தடுப்புக் காவல் மரணங்கள் நிகழவில்லை
தற்போதைய செய்திகள்

2022 ஆம் ஆண்டிலிருந்து காவல் துறையில் ஏற்பட்ட தடுப்புக் காவல் மரணங்கள் நிகழவில்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை 02-

உள்துறை அமைச்சராக தாம் பொறுப்பேற்ற 2022 ஆம் ஆண்டிலிருந்து காவல் துறையால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக மற்றும் சிறைச்சாலைகளில் நிகழ்ந்த சம்பவங்களினால் தடுப்புக் காவல் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என்ற உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நாசுல்ஷன் இஸ்மெயில் தெரிவித்தார்.

எனினும் காவல்துறை தடுப்பு காவல் மரணங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் நிகழ்ந்த மரணங்கள் யாவும் உடல் நலம் பிரச்சனைகளால் ஏற்பட்டவையாகும் என்று அமைச்சர் விளக்கினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே 20 ஆம் தேதி வரை காவல் துறை தடுப்புக் காவலில் 24 மரணச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

சிறைச்சாலையில் 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கோவிட்-19, காசநோய், மாரடைப்பு, மற்றும் நுரையீரலில் நீர் கோர்ப்பு முதலிய உடல் சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாக இந்த தடுப்புக் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்று சைபுதீன் சுட்டிக்காட்டினார்.

தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ளுதல், காவல் துறையினரால் ஏற்பட்ட காயங்கள் முதலிய காரணங்களில் எந்தவொரு இறப்பும் நிகழவில்லை என்று அமைச்சர் சைபுதீன் விளக்கினார்.

Related News