Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை நிகழ்வுகள் அவசியம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிராமப்புற மக்களிடையே ஒற்றுமை நிகழ்வுகள் அவசியம்

சுங்கை பட்டாணி, ஜூன்.28-

கிராமப்புற மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு அதிக அளவிலான ஒற்றுமை நிகழ்வுகள் எப்பொழுதும் செய்யப்பட வேண்டும் என்று சுங்கை பட்டாணி கம்போங் சுங்கை துக்காங்கின் கிராமப்புற மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பரமசிவன் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஜூன் 16 ஆம் தேதி காலை 8.00 மணி அளவில் கம்போங் சுங்கை துக்காங் கிராமப் புறத்தில் துப்புரவுப் பணிவுடன் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வு சிறப்பாக அக்கிராமத்தின் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராமப்புற மக்களுக்கு அதிக அளவிலான மருத்துவ விழிப்புணர்வு வழங்குவதற்காகவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கிராமப் புறத்தின் நன்மையைப் பற்றி உணர்வுத்துவதற்காகவும் கிராமப்புற மேம்பாட்டுக் குழுவுடன் இணைந்து ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.

மேலும் , சுங்கை துக்காங் கிராமப்புற மேம்பாட்டுக் குழுவின் ஒன்று கூடும் நிகழ்வினை மெர்போ மக்கள் நீதிக் கட்சியின் தொகுதித் தலைவரும் மலேசியக் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியுமான யுகின்ஸ் முத்துசாமி தொடக்கி வைத்தார்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் கம்போங் சுங்கை துக்காங்கைச் சுற்றிலும் துப்புரவு பணிகளை மேற்கொண்ட பின், சோமசுந்தரம் தமிழ் மாணவர்களுக்காக வர்ணம் தீட்டும் போட்டிகளும் நடைபெற்றது. அத்துடன் பி40 குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்களையும் எடுத்து வழங்கினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →