Dec 2, 2025
Thisaigal NewsYouTube
குழந்தைகளைச் சித்ரவதை செய்த கணவன் மனைவி கைது
தற்போதைய செய்திகள்

குழந்தைகளைச் சித்ரவதை செய்த கணவன் மனைவி கைது

Share:

தங்களின் இரண்டு குழந்தைகளை சித்ரவதை செய்ததற்காக ஒரு தம்பதியினர் இன்று குவந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதம், அக்குழந்தைகளின் வளர்ப்பு தாய் தந்தையரான 29 வயதுடைய நூர் அலீஃப் ரிட்ஸ்வான் ஸகாரியா மற்றும் 28 வயதுடைய நூர் ஷஃபிகா ரொஸ்லி, 6 வயது சிறுவனையும், 5 வயது சிறுமியையும் சித்ரவதை செய்து, உடலில் காயத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்தின் கீழ் அவ்விருவரம் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News