Aug 23, 2026
Thisaigal NewsYouTube
குறைந்தபட்ச சம்பளம் ரிங்கிட் 3,100 ஆக உயர்த்த வேண்டும் — எம்டியுசி வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

குறைந்தபட்ச சம்பளம் ரிங்கிட் 3,100 ஆக உயர்த்த வேண்டும் — எம்டியுசி வலியுறுத்தல்

Share:

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான எம்டியுசி, நாட்டின் குறைந்தபட்ச மாத சம்பளத்தை ரிங்கிட் 3,100 ஆக உயர்த்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

வாழ்க்கைச் செலவு, உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போதைய ரிங்கிட் 1,700 குறைந்தபட்ச சம்பளம் போதுமானதாக இல்லை என எம்டியுசி தெரிவித்துள்ளது.

இதனிடையே, புதிய சம்பளக் கட்டமைப்பு நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

10 ஆண்டுகளாக பணியாற்றியும் சில ஊழியர்கள் இன்னும் ரிங்கிட் 1,700 சம்பளத்திலேயே இருப்பதாக எம்டியுசி பொதுச் செயலாளர் கமாருல் பஹாரின் மன்சோர் சுட்டிக் காட்டினார்.

அரசாங்கம் தற்போது குறைந்தபட்ச சம்பளத்தை மறுஆய்வு செய்து வரும் நிலையில், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரிங்கிட் 3,100 ஒரு நியாயமான அடிப்படையாக அமையும் என எம்டியுசி தெரிவித்துள்ளது.

Related News