ஷா ஆலாம், ஆகஸ்ட்.22-
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மலேசிய சுங்கத்துறை, ஒரு பில்லியனுக்கும் மேலான ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் பொருட்களைப் பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டை விட கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 281 மில்லியன் ரிங்கிட் அதிகரித்துள்ளது. இம்முறை, சிறிய கடத்தல் சம்பவங்களை விட, பெரிய கொள்கலன்களும் அதிக மதிப்புள்ள பொருட்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டதே இந்த அதிரடி வெற்றிக்குக் காரணம் என சுங்கத்துறைத் தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிஸானா முகமட் ஸைனுடின் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர் இயந்திரங்களும், மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.








