நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துவருவதனால், குப்பைகளைத் திறந்த வெளியில் எரிக்க வேண்டாம் என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நினைவுறுத்தியுள்ளது.
இது போன்ற செயல்கள் பெரிய அளவிலான தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ள வேளையில், அதிக அளவிலான உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் என்று மூத்த உதவி தீயணைப்பு ஆணையர் நூர்டின் ஃபௌஸி தெரிவித்தார்.
எனவே, கடுமையான உஷனம் நிலவிவரும் இக்காலக்கட்டத்தில் விவசாயிகள், திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பது ஏற்றது அல்ல. இது எதிர்பாராத தீ விபத்துகளை ஏற்படுத்தி பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று நூர்டின் ஃபௌஸி வலியுறுத்தினார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


