கோலாலம்பூர், செப்டம்பர்.09-
அரசாங்கப் பணியாளர்களுக்கான வங்கிக் கடன்களை அங்கீகரிப்பதற்காக, ஊழல் மற்றும் பண மோசடிக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்தாகக் கூறும், 20 வங்கி அதிகாரிகள் மீது விரைவில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
இம்மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாதத் தொடக்கத்திலோ அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படலாம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
ஓப்ஸ் ஸ்கை இன்வெஸ்டிகேஷன் என்ற பெயரில் ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது நடத்தி வரும் ஊழல் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவர்கள் மீது எம்ஏசிசி அக்ட் படி குற்றம் சுமத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.








