Sep 26, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் இரண்டாம் கட்ட விசாரணையில் ஜேம்ஸ் சாய் இன்று ஆஜரானார்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம் இரண்டாம் கட்ட விசாரணையில் ஜேம்ஸ் சாய் இன்று ஆஜரானார்

Share:

முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி யின் முன்னாள் உதவியாளர் ஜேம்ஸ் சாய், புத்ராஜெயாவிலுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில், இன்று இரண்டாவது கட்ட விசாரணைக்காக ஆஜரானார்.

காலை 9.45 மணியளவில் அவர் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நுண்சில்கள் தயாரிப்பு நிறுவனமான ஆம் ஹோல்டிங்ஸ் உடன் கையெழுத்தான 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றது.

முன்னதாக நேற்று, இங்கிலாந்திலிருந்து மலேசியா திரும்பிய ஜேம்ஸ் சாய், சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News