Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குவாந்தான் போர் விமான விபத்து: பறவை மோதியது தான் காரணம் - விசாரணை அறிக்கை தகவல்
தற்போதைய செய்திகள்

குவாந்தான் போர் விமான விபத்து: பறவை மோதியது தான் காரணம் - விசாரணை அறிக்கை தகவல்

Share:

குவாந்தான், செப்டம்பர்.18-

கடந்த ஆகஸ்ட் மாதம் குவாந்தான் விமானப்படைத் தளத்தில் போர் விமானம் ஒன்று எஞ்சின் செயலிழந்து விபத்துக்குள்ளானதற்குக் காரணம், அதில் பறவை மோதியது என்பது உறுதியாகியுள்ளது.

இத்தகவலை தேசிய விமானப் படைத் தலைவர் நோராஸ்லான் அரிஸ் இன்று வியாழக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 22 முதல் இவ்விபத்து குறித்த விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், purple heron என்ற பறவை மோதியதால் தான் விமானத்தின் இடது எஞ்சின் செயலிழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையை, தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், வேதியியல் துறை, காவல்துறை, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை ஆகியோருடன் அமெரிக்க கடற்படையும் இணைந்து நடத்தியதாகவும் நோராஸ்லான் அரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு சுமார் 9.05 மணியளவில் பகாங், குவாந்தனில் உள்ள சுல்தான் ஹஜி அஹ்மாட் ஷா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இவ்விமான விபத்து நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News