Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸ் கோலாலம்பூருக்கே திரும்பியது
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸ் கோலாலம்பூருக்கே திரும்பியது

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 04-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 259 யாத்ரீகாகளுடன் Jeddah [ஜெட்டா]விற்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ்சுக்கு சொந்தமான MH156 விமானம் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக கோலாலம்பூருக்கே திரும்பியது.

சவூதி அரேயியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான ஜெட்டா-விற்கு மலேசிய விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டது.

அந்த விமானம் , மலாக்கா , நீரினையில் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது , திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடன் தொடர்பு கொண்ட விமானி ,அந்த யாத்ரிகர் பயணம் செஇத விமானத்தை கோலாலம்பூருக்கெ திரும்ப முடிவு செய்தார்.

விமானத்தின் எரிபொருளை தீர்ப்பதற்கு ஓரிரு சுற்றுகளை மேற்கொண்ட விமானி,அந்த விமானத்தை மாலை 5.00 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

கோலாலம்பூருக்கு திரும்புவதற்கு அந்த விமானம் மேற்கொண்ட சுமார் இரண்டு மணி நேரம் பயணத்தின் போது விமானம் திடிர் என்று இரண்டு மூன்று முறை கீழ் நோக்கி தள்ளப்பட்டதாக பயணிகள் கூறினர்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை